
தமிழகம்
கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டு சிறை!!
தமிழகத்தில் கஞ்சா விற்பனை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பவுடர் ரவி, சின்னத்துரை, பாம்பு நாகராஜ் ஆகியோர் கஞ்சா விற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையானது இன்று சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அமர்வுக்கு வந்தது. அப்போது மூன்று பேரும் கஞ்சா விற்றது உறுதியானது.
இந்த சூழலில் பவுடர் ரவி, சின்னத்துரை, பாம்பு நாகராஜ் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், போதைப்பொருள் கஞ்சா விற்பனை செய்வது குற்றம் என்றும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்தது.
