+2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மே பன்னிரண்டாம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வு இயக்குனர் அறிவித்துள்ளார்.

வரும் 12ஆம் தேதி காலை 11 மணி முதல் இணையத்தில் இருந்து அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் தனித்தேர்வர் தேர்வு மைய தலைமையாசிரியர்களும் தேர்வுகளுக்கான உரிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது .

மேலும் அந்த சான்றிதழ்களில் உள்ள விபரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரை இட்டு தயாராக வைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தபட்டுள்ளது.

தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்பவர்கள் மே 9 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது .பொது தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பினால் தான் படித்த பள்ளிகள் மூலமும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் ஒன்பது முதல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் கோர்பவர்கள் அதே பாடத்திற்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடாது என்றும் விடைத்தாள் நகல் பெற்றதும் அவர்கள் மறுக்கூட்டல் அல்லது மறு மதிப்பீடு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை  ஆய்வாளர்

மேலும் விடைத்தாள் பெற அனைத்து பாடங்களுக்கும் 275 கட்டணமும் மறு கூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூபாய் 305 மற்ற பாடங்களுக்கு ரூபாய் 205 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.