
தமிழகம்
சென்னையில் பரபரப்பு!! விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு;;
சென்னை பெருங்குடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் கிரீன் ஏக்கர்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் நேற்று இரவு பள்ளிக்கரணையை சேர்ந்த பெரியசாமி மற்றும் ஆவடியை சேர்ந்த தட்சனா மூர்த்தி ஆகியோர் கழிவு நீர் தொட்டியில் உள்ள சகதியை வெளியேற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தட்சனா மூர்த்தி தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்ட சில மணி நிமிடங்களில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர் சரவணன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
