கரூர் அருகே குளித்தலை என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர் விரைவு ரயிலில் சிக்கி உயிரிழந்தனர். மயிலாடுதுறை-மைசூரு விரைவு ரயில் கரூர் குளித்தலை அருகே உள்ள மாயனூர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.
திடீரென ஒரு ஆணும் பெண்ணும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர், ஆனால் சில நொடிகளில் வேகமாக வந்த ரயிலில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் இருவரும் ஈரோட்டைச் சேர்ந்த பெருமாள் (50), மாயனூரைச் சேர்ந்த போதும் பொன்னு (35) என்பதும், அவர்கள் ரயில் வருவதற்கு முன்பாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் கணவரை பிரிந்த போதும் பொண்ணு கடந்த சில மாதங்களாக மாயனூரில் பெருமாளுடன் வசித்து வந்தது தெரியவந்தது.
திருச்சியில் அனைத்து பள்ளிகளிலும் போக்குவரத்து சாம்பியன் திட்டம் அமல்!
கரூர் ரயில்வே போலீஸார் விரைந்து வந்து சடலங்களை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே டிஎஸ்பி பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.