2 மணி நேரம் விசாரணை! திணறிய மருத்துவர்கள்… பிரியா மரணத்தில் திடீர் திருப்பம்!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக 2 மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சென்னை கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனை ஆன மாணவி பிரியா வலது காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொளத்தூர் உள்ள அரசு மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாணவிக்கு மீண்டும் வலி அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டாதாகவும், இதனால் காலை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

உ.பி-யில் பயங்கரம்: லூடோ விளையாட்டில் தன்னையே பணயமாக வைத்த பெண்!

அதன் படி, மாணவிக்கு கால் அகற்றப்பட்ட நிலையில் திடீரென சிறுநீரகம், ஈரல் உள்ளி பகுதிகள் பாதிப்படைந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி மரணம் அடைந்தார். இத்தகைய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ஏ.பால் ராம்சங்கர் மற்றும் கே.சோமசுந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றமா? – மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி!!

இந்த சூழலில் மாணவிக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி பொது அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது நடத்தப்பட்ட விசாரணையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.