
தமிழகம்
மேட்டூர் காவேரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி!
மேட்டூர் அருகே சேத்துக்குளி பகுதியில் ஆற்றில் மூழ்கி
2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை அடுத்த சேத்துக்குளி கிராமத்தில் கோடை விடுமுறை கழிப்பதற்காக சென்னையை சேர்ந்த 4 சிறுமிகள் அவரது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக பாட்டி வீட்டில் தங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுவதால் பாட்டியுடன் சேர்ந்து காவேரி நீர்பிடிப்பு பகுதிக்கு துணி துவைக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த சிறுமிகள் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக பள்ளம் இருப்பது தெரியமல் அங்கு இருக்கும் குழியில் சிக்கி பரிதாபமாக அக்குழந்தைகள் உயிரிழந்தனர். இதனிடையே அப்பகுதியில் இருக்கும் சிறுமியின் உடல்களை மீட்டனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த குழந்தைகளின் மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
