2 டோஸ் ஊசி போட்டவர்கள் 3வது ஊசியும் போட வேண்டும்- சுகாதாரத்துறை

கொரோனா பாதித்த அனைவருக்கும் கடந்த 1 வருடமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே போட வேண்டும் என்பதே விதியாக இருந்தது.

அதனால் பலரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு விட்டனர் இரண்டு டோஸ் போட்ட சான்றிதழ் இருந்தால்தான் பல இடங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் பலரும் ஊசி போட்ட சான்றிதலை வைத்து பல முக்கிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கும் கொரோனா பரவி வருவதால் மூன்றாவதாக ஒரு பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் நலம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள இந்த நிலையில் இன்னும் பலர் தடுப்பூசியே போடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment