மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருகின்ற 17, 18-ம் ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கட்சியை வலுப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் ஏற்கனவே மண்டல வாரியாக கட்சியின் உயர் நிர்வாகிகள் ஆலோசனை கூடங்களும் நடைப்பெறுவதாக கூறப்படுகிறது.
முதல் பயணமாக கோவை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பல துறைகளில் சாதித்த பெண்களை தேர்தெடுத்து மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழா நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.