சென்னை தினம்: 2 நாட்களுக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகள்!!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தினத்தை கொண்டாடுவதற்காக ஆகஸ்ட் 20,21-ம் தேதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட்நகர், எலியட்ஸ் சாலையில் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 வரையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் இயற்கை உர விற்பனைக்கான கடைகளும் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் செல்பி வித் பூத் அமைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 22-ம் தேதி பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.