4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை! சென்னையில் 160 நிவாரண முகாம்கள் தயார்!!

தமிழகத்தில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயாராகப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

முகாம்

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் மட்டும் தற்போது 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி மீட்பு, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின்

குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மீட்பு, நிவாரணப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு, காவல் துறையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு மேல் அதி கனமழை பெய்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment