ரெண்டு நாளில் 431 கோடி வசூல்! போன வருஷத்தை விட கொஞ்சம் குறைவுதான்!

தமிழகத்தில் அதிகம் வருமானம் தரும் தொழில் என்றால் அதனை மதுபானம் விற்பனை என்றே கூறலாம். இந்த டாஸ்மாக் கடையில் நேற்றைய தினமும் விடுமுறை இன்றி விற்பனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மதுபாட்டில்கள்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூபாய் 431 கோடிக்கு மதுபான விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தீபாவளியை ஒட்டி கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில் ரூபாய் 98.89 கோடிக்கு விற்பனை செய்து தமிழகத்தில் அதிக மதுபானம் விற்பனை செய்த மண்டலமாக காணப்படுகிறது. சென்னையில் ரூபாய் 79.84 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சேலம் மண்டலத்தில் 87.89 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்துள்ளது. திருச்சியில் ரூபாய் 89.95 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ரூபாய் 74.46 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டும் ரூபாய் 205.61 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனையானது ரூபாய் 227. 88 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி அன்று ரூபாய் 225.42 கோடிக்கு மதுபான விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று ரூபாய் 239.81 கோடிக்கு மதுபான விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி மற்றும் தீபாவளி முந்தைய நாள் மதுபான விற்பனை சற்று குறைவாகவே காணப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment