சடலத்துடன் 2 நாள் பிரார்த்தனை… மதுரையில் பரபரப்பு!!

மதுரை எஸ்.எஸ்.காலணி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி மாலதி தனியார் ஹோட்டல் இன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், முதல் மகன் ஜெய்சங்கர் மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறியதாக தெரிகிறது.

வேலூரில் சோகம்! மைதானத்தை சுற்றி வந்த மாணவன் பலி..!!

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சூழலில் பால கிருஷ்ணன் இது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல், வீட்டிற்கு கொண்டுவந்து 3 நாள் சடலத்துடன் பிரார்த்தனை செய்து செய்து வந்துள்ளனர்.

நளினி உள்பட 6 பேர் விடுதலை: தமிழக முதல்வர் வரவேற்பு!!

அதே சமயம் அக்கம்பக்கத்தினர் கேட்டப்போது உறவினர் வருகைக்காக உடலை வைத்திருப்பதாக தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் அங்கு வந்த போலீசார் சுடுகாட்டிற்கு உடலை எடுத்து சென்று தகனம் செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment