தொழில்நுட்ப அதிகாரி வீட்டில் 2 கோடி ரூபாய் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி வேட்டை!!

லஞ்ச ஒழிப்புத்துறை

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை தீவிரமாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்கிய அரசு அலுவலகங்களிலும் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது.லஞ்சம்

இவை தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் நடைபெற்று வருவதாக காணப்படுகிறது. நேற்றையதினம் மகாராஷ்டிர துணை முதல்வரின் ஆயிரம் கோடி சொத்து முடக்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி அதிகாரி வீட்டில் இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனாவின் வீட்டில் இருந்து இதுவரை இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் ஷோபனாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஷோபனாவின் இல்லத்திலிருந்து சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பறிமுதல் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் ஷோபனாவிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுபோன்று தொடர்ச்சியாக தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நடைபெற்று வருகின்றன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print