மனிதனின் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் பருவநிலை மாற்றத்தினை பாதிப்புக்குள்ளாகுவதாக மாற்றுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக பல இயற்கை பேரழிவுகள் அதிகம் நிகழ்கிறது.
குறிப்பாக இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏனென்றால் அங்கு கட்டிடங்களின் உயரம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நிலத்தின் தன்மை உணராமல் கட்டிடங்கள் கட்டுவது போன்ற காரணங்களாலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. அதன்படி கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிக்கபல்லபுரா நகரில் இன்று காலை 7.10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவாகியுள்ளது.