மருத்துவமனையில் தாயின் குமுறல்! பொரித்த மீனை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!!

தமிழகத்தில் நாள்தோறும் கலப்படமான உணவுகள் பறிமுதல் செய்து வருகிறது. இந்த உணவுகளை சாப்பிடும் குழந்தைகள் பலரும் அவ்வப்போது மயக்கமான நிலையில் காணப்படுகின்றனர்.

ஒரு சிலர் உயிர் இழந்தும் விடுகின்றனர். இந்நிலையில் தெருவோரங்களில் பொரித்த மீன் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பதைபதைக்க வைத்துள்ளது.

வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அன்சருக்கு நான்கு வயதில் ஆப்ரின் என்ற பெண் குழந்தையும் மூன்று வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். ஆட்டோ ஓட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்த அன்சர் சைதாப்பேட்டை பகுதியில் எண்ணெயில் பொரித்த மீனை வாங்கிக் கொண்டு வந்தார்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்து அந்த பொரித்த மீனை சாப்பிட்ட குழந்தைகள் இருவரும் திடிரென்று வாந்தி எடுத்து காணப்பட்டனர். இதனால் அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார் தந்தை அன்சர்.

மருந்தினை உண்ட இரண்டு குழந்தைகளும் தலை தொங்கியவாறு மயக்கமடைந்து உள்ளனர். இதனால் இரண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு இரண்டு பச்சிளம் குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் தாயின் குமுறல் சத்தம் அங்குள்ள அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment