+2 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு 5 மதிப்பெண்கள் – தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

இந்த வருட +2 கணிதப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 5 மதிப்பெண் வினா எண் 47 (b)இல் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு 5 மதிப்பெண்கள் வழங்கியது அரசு தேர்வுகள் இயக்ககம்.

இந்த வருட +2 கணிதப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 5 மதிப்பெண் வினா எண் 47 (b)இல் இடம் பெற்ற வினா, ஒரு நீள் வட்டத்துக்கும் ஒரு கோட்டுக்கும் பொதுவாக அமையும் பரப்பினைக் காண்க என்பது வினா.

ஒரு நீள் வட்டத்துக்கு பரப்பு உண்டு. ஆனால் ஒரு கோட்டுக்கு இரு புறமும் தளத்தின் பகுதிகள் உண்டு. அவை கோட்டுக்குள் அடைபடும் பகுதிகள் அல்ல.

நீள்வட்டத்தில் அடைபடும் பரப்பு உள்ள பொழுது கோட்டில் அடைபடும் பகுதி இல்லை என்பதால் “ *பொது பரப்பு” என்று ஒன்று இருக்க இயலாது. எனவே இவ்வினா தவறு. மாணவர்களால் கேள்வியை புரிந்து கொண்டு கேள்விக்கான சரியான விடையை அளிக்க இயலாது.

மேலும் இந்த கேள்வி குறித்து மாணவர்கள் குழப்பம் அடைந்ததால் இதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு கணித தேர்வில் 47 b பிரிவில் கேட்கப்பட்ட வினாவிற்கு மாணவர்கள் விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே அவர்களுக்கு ஐந்து மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.