சென்னையில் 2.5 கிலோ கஞ்சா- அசாம் சேர்ந்த இருவர் கைது!

சென்னையில் பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்வதற்காக 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக அசாமில் இருந்து இருவரை நகர போலீஸார் தற்போழுது கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் அஸ்ஸாம் மாநிலம் சிவசாகரைச் சேர்ந்த துல்மோன் சேத்தியா (27) மற்றும் மோனி கஞ்சன் கோகோய் (24) என அடையாளம் காணப்பட்டனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் இருவரையும் கண்காணித்து வந்தனர்.

மேட்டுப்பாளையம் சந்திப்பு அருகே சந்தேகத்தின் பேரில் இருவரையும் மறித்து, அவர்கள் கொண்டு சென்ற பையில் இருந்த பொருட்கள் குறித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பையை ஆய்வு செய்ததில், அதில் 2.5 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிஆர்பிஎப் ஆள்சேர்ப்பு தேர்வில் தமிழ் சேர்க்க ஸ்டாலின் அமித்ஷாவுக்கு கடிதம்

அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.