Connect with us

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில்… விடுமுறை அளிக்க பரிந்துரை!!

fever

செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில்… விடுமுறை அளிக்க பரிந்துரை!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக புதுச்சேரி மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தெரிகிறது. குறிப்பாக ஊரடங்கு காரணமாக தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மீண்டும் ஃப்ளூ காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடக்கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் படி, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக கல்வித்துறை இயக்குநருக்கு, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top