புயல் எச்சரிக்கை!! 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் சென்னை, நாகை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதே போல் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment