Connect with us

ஒரு தீபாவளிக்கு இத்தனை ஹிட் படங்களா சரித்திர சாதனை படைத்த 1992

பொழுதுபோக்கு

ஒரு தீபாவளிக்கு இத்தனை ஹிட் படங்களா சரித்திர சாதனை படைத்த 1992

தீபாவளி வந்து விட்டாலே இப்போதெல்லாம் இரண்டு படங்கள் தான் ரிலீஸ் ஆகிறது அதில் ஏதாவது மண்ணை வேறு கவ்வுகிறது. 2012 தீபாவளிக்கு விஜய் நடித்த துப்பாக்கி படம் மட்டுமே முக்கிய படமாக ரிலீஸ் ஆகியுள்ளது.

535afa41ef2b0d97fc30c0a195279d83-1

தற்போதைய தீபாவளிக்கு கூட இரண்டு முக்கிய படங்கள்தான் ரிலீஸ் ஆக இருக்கின்றன.

அப்போதைய தீபாவளி படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட்ட மனநிலைக்கு வைத்திருந்தன. காரணம் என்னவென்றால் எல்லா தரப்பு நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகும். ஹிட் ஆன நடிகர்களையே விரும்பாமல் இருக்கும் திரைப்பட ரசிகராக இருந்தால் கூட புதுமுக நடிகர் நடித்த ஏதாவது ஒரு படம் வந்து ஹிட் ஆகி விடும் கதையம்சத்துடன் அப்படம் இருந்து அனைவரையும் கவர்ந்து விடும்.

தற்போது அப்படி இல்லை. எண்ணி வைத்தாற்போல் இரண்டு படங்கள், தீபாவளி கொண்டாட்டத்துக்காக அதைத்தான் நீ பார்க்க வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது.ஏழெட்டு படங்கள் ரிலீஸ் ஆனால் சாய்ஸ் எடுத்து நமக்கு பிடித்த ஏதாவது இரண்டு படங்களை தேர்வு செய்து பார்ப்போம். இப்போது நிலைமை அப்படி இல்லை.

கடந்த 1992ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த படங்கள் எல்லாமே அதிரி புதிரி ஹிட்தான். அப்போதைய முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு,பாக்யராஜ் என அப்போதைய முன்னணி நடிகர்கள் படம் எல்லாம் ஒரே தீபாவளிக்கு வந்து விட்டது.

இதில் கமலின் தேவர் மகன், பாக்யராஜின் ராசுக்குட்டி போன்ற படங்கள் மிக பெரிய லெவல் ஹிட் படங்களானது. ரஜினியின் பாண்டியன் திரைப்படம் அவருக்கு இருந்த மாஸை வைத்து ஓடியது. ரஜினியை வைத்து தொடர் படங்களை இயக்கிய எஸ்.பி முத்துராமன் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்த கடைசி படமிது.

பி.ஏ ஆர்ட் புரொடக்சன்ஸ் சார்பாக பஞ்சு அருணாசலம் தயாரித்த ராசுக்க்குட்டி திரைப்படம் சுவாரஸ்யமான கமர்ஷியல் படமாக ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடினார்கள்.

செந்தமிழ்ப்பாட்டு, திருமதி பழனிச்சாமி படங்களும் சுமாரான வெற்றியை பெற்றன.

கமலின் தேவர் மகன் இந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது. இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத படமாகி விட்டது என்றால் மிகையில்லை.

பழம்பெரும் இயக்குனர், இயக்குனர் திலகம் என போற்றப்பட்ட கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கி விஜயகாந்த் நடித்த காவியத்தலைவன் படமும் இந்த தீபாவளிக்கு வந்தது ஓரளவு பேசப்பட்டது.

இது போதாதென்று ராஜீவ் கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட படங்கள் கடைசி நேரத்தில் சென்சாரில் மாட்டிக்கொண்டன. அந்த படமும் வந்திருந்தால், ராம்கி, ரகுமான் நடித்த திரைப்படமும் வந்திருக்கும்.

அந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு வந்த 76 கோடி வசூலில் பாதி வசூல் 92ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த படங்கள் பெற்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இப்போ சொல்லுங்க இப்ப இருக்கிற முன்னணி நாயகர்கள் விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, விஷால்,கார்த்தி,சூர்யா, சிவகார்த்திகேயன், விமல் என இவர்களின் படங்கள் எல்லாம் ஒரே தீபாவளிக்கோ பொங்கலுக்கோ வர வழியுண்டா என்றால் சீமான் பாணியில் வாய்ப்பில்ல ராஜா என்ற ஒற்றை சொல்லி விட்டு கிளம்பிவிடலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top