மீண்டும் அதே 193 டார்கெட்: கொல்கத்தாவுக்கு வாய்ப்பா?

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி தற்போது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது 192 ரன்கள் எடுத்துள்ளது .

இந்த நிலையில் 193 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இதே ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணி மோதியபோது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து இதே 192 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கொல்கத்தா அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து 19.5 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து கோப்பையை கைப்பற்றியது. 2012ஆம் ஆண்டு இன்று திரும்புமா அல்லது சிஎஸ்கே அந்த தோல்விக்கு பழிவாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.