Connect with us

பெரம்பலூரில் வீட்டில் பீரோவில் இருந்து 19 சவரன் நகை கொள்ளை!!

News

பெரம்பலூரில் வீட்டில் பீரோவில் இருந்து 19 சவரன் நகை கொள்ளை!!

4cd7ce66d81f6303493ed929076552bb

தற்போது நம் தமிழகத்தில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத நிலைமை கூட கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது மக்களுக்கு மிகுந்த வேதனையை உருவாக்குகிறது. மேலும் குறிப்பாக அதிகமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் செயின் பறிப்பு நகை திருட்டு சம்பவம் அரங்கேறிக் கொண்டே வருகிறது.e331ef3e203fbe6240be19ae62797ff9

மேலும் அவ்வப்போது பூட்டிய வீடுகளிலும் கொள்ளையர்கள் கைவசம் காட்டுகின்றனர். அதன் வரிசையில் தற்போது தமிழகத்தில் மத்திய மாவட்டங்களில் ஒன்றாக காணப்படுகின்ற பெரம்பலூர் மாவட்டத்தில் 19 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அருகே காரியானூர் கிராமத்தில் கணேசன் என்பவர் வீட்டில் 19 சவரன் நகை கொள்ளை அடிக்க பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வீட்டின் பின்புறமாக புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 19 சவரன் நகையை திருடி உள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் கணேசன் அளித்த புகாரையடுத்து கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top