19 கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ஸ் அடிக்க முடியாத அளவிற்கு தரம் உயர்வு!!

தற்போது தமிழகத்தில் அதிகளவு அரசு மருத்துவமனைகள் காணப்படுகிறது. இந்த அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டு காணப்பட்டுள்ளன.அரசு மருத்துவமனை

இவ்வாறு இருக்கையில் தற்போது தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த படுகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்தப்படி இந்த 19 மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

அறந்தாங்கி, குழித்துறை, குன்னூர், பரமக்குடி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட உள்ளன. ராசிபுரம், பழனி, தாராபுரம், வேதாரணியம், திருத்தணி போன்ற மருத்துவமனைகளும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் ஆகின்றன.

ஓசூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், தாம்பரம், நாங்குநேரி, மயிலாடுதுறை ஆகிய மருத்துவமனைகளும் தரம் உயர்த்தப்படுகின்றன. திண்டிவனம், குடியநத்தம், திருப்பத்தூர் ஆகிய அரசு மருத்துவமனைகளும் தற்போது தரம் உயர்த்தப்பட உள்ளன.

19 மருத்துவமனைகளும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைமை மருத்துவமனையாக மாற்றப் படுகின்றன. இந்த 19 மாவட்டங்களிலிருந்த தலைமை மருத்துவமனையிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்பட்டதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி இந்த மருத்துவமனைகளே அந்தந்த மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை மாறும் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment