கடலூரில் 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு..!!

கடலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய இந்நாளில் உயிரிழந்தவர்களுக்கு 18-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலை தாக்கியது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சுனாமி அலைகள் தாக்கியதால் 13 மாவட்டங்களில் அலைகள் பெரிதும் தாக்கியது.

இதில் தமிழகத்தில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். உலகளவில் 2 லட்சத்துக்கும் மேலானோரும் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

திமுகவில் பரபரப்பு! கூட்டுறவுத் துறை செயலாளர் சென்ற கார் விபத்து.!

இந்நிலையில் சுனாமியில் சிக்கி கடலூரில் 600-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தகைய துயரத்தில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை. இதன் காரணமாக ஒவ்வோரு ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 18-ம் ஆண்டு தினத்தில் பலர் கடலுக்கு செல்லாமலும், கருப்பு கொடிகள் ஏந்தியும், பேரணியாக சென்று தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர். அதே போல் பெண்கள் கடலில் பால் ஊற்றி, மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.