இந்தியா-ஆசியான் 18ஆவது உச்சி மாநாடு:அடுத்தாண்டு ஆசியான் உடனான உறவு 30 ஆண்டுகளை எட்டும்!

இன்றைய தினம் இந்தியா-ஆசியான் 18வது உச்சிமாநாடு கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற பல வல்லரசு நாடுகள் காணொளி மூலமாக இணைந்தன. இதில் காணொளி மூலமாக பங்கேற்ற பிரதமர் மோடி அதில் பேசினார்.மோடி

அதன்படி கொரோனா காலகட்டத்தில் இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே உறவுகள் வலுவடைந்த ஆக இருந்தது என்றும் பெருமிதம் கொண்டார். மேலும் இந்தக் கொரோனாவானது இந்தியா-ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு ஏராளமான சவால்களை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

ஆசியான் நாடுகளின் கூட்டுறவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவை வரும் காலங்களிலும் இருக்கும் என்றும் பிரதமர் மோடி பேசினார். மரபுகள், பாரம்பரிய மொழிகள் நூல்கள், கட்டிடக்கலை உணவில் இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் பெரும் ஒற்றுமைகள் உள்ளன என்றும் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.

அடுத்தாண்டு ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவின் உறவு 30 ஆண்டுகளை எட்டும் என்றும் கூறினார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவின் 75 சுதந்திர தினத்தை ஆசியான் இந்தியா நட்புணர்வு ஆண்டாக கொண்டாடுவோம் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment