அட்வான்ஸ் புக்கிங்… 18-வது பிறந்த நாள் பரிசாக வாக்காளர் அட்டை!!!!

17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டையை ஆன்லைன் மூலமாக ‘ அட்வான்ஸ் புக்கிங்’ செய்தால் 18-வது பிறந்த நாள் பரிசாக வாக்காளர் அட்டை வீடு தேடி வரும் என்று இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே கூறியுள்ளார்.

இந்தியாவைப் பொருத்த வரையில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியலின் எண்ணிக்கையை அதிகரிக்க அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன் படி, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி சென்னையில் நடைபெற்ற போட்டிகளில்  கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில்  இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர் 17 வயது முடிந்தவர்கள் ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறினார். இந்நிலையில் 18-வது பிறந்த நாளில் அவர்களின் பிறந்த நாள் பரிசாக வீடு தேடி வாக்காளர் அட்டை வழங்கப்படுவதாக கூறினார்.

மேலும், இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டேதலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து தேர்தல்  அதிகாரிகளும் பங்கேற்றதாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.