மெடிக்கல் மிராக்கிள்: இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர் 5 நிமிடம் கழித்து உயிர்த்தெழுந்த அதிசயம்..!

மருத்துவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 18 வயது இளைஞர் 5 நிமிடம் கழித்து உயிருடன் வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடினார்.

ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து குடும்பத்தினர் பெரும் சோகமடைந்தனர். இந்த நிலையில் அந்த இளைஞரின் பெற்றோர் மகனுக்கு இறுதிச்சடங்கு செய்ய முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் கை அசைந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

இதனை அடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவரிடம் சென்று கூறிய போது மருத்துவர்கள் திரும்பி பார்த்து சோதனை செய்தபோது அவர் உயிரோடு இருப்பதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தங்களது இத்தனை வருட கால மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு நிகழ்வை நாங்கள் பார்த்ததில்லை என்றும் நாங்கள் சோதனை செய்தபோது இதயம் நின்று விட்டதை உறுதி செய்தோம் என்றும் தற்போது மீண்டும் இதயம் தானாகவே இயங்குவது எங்களுக்கு மெடிக்கல் மிராக்கலாக இருக்கிறது என்றும் கூறினார்.

இதனை அடுத்து அவருக்கு உடனடியாக தேவரே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த இளைஞர் குறுகிய கால நினைவாற்றலை இழந்து உள்ளார் என்றும் அவர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறிய போது இது மிகவும் ஒரு ஆச்சரியமான அனுபவம் என்றும் மருத்துவ ரீதியில் நாங்கள் அவரை சோதனை செய்தபோது அவர் மோசமான நிலையில் இருந்தார் என்றும் அதன் பின் அவரது உயிர் பிரிந்து விட்டதை நாங்கள் உறுதி செய்தோம் என்றும் ஆனால் இப்போது அவர் உயிரோடு இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews