Connect with us

“18 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் சென்றது நியூஸிலாந்து!” ஆயினும் கிரிக்கெட் தொடர் ரத்து!!

Sports

“18 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் சென்றது நியூஸிலாந்து!” ஆயினும் கிரிக்கெட் தொடர் ரத்து!!

712e1fb6d752e59be2f05e11a92ca464-1

தற்போது உலகில் உள்ள பல கிரிக்கெட் அணிகளும் தங்களை பலப்படுத்திக் கொண்டு வருகிறது. ஏன் என்றால் இன்னும் சில மாதங்களில் 20ஓவர்   உலக கோப்பை நடைபெற உள்ளது. மேலும் இந்த 20 ஓவர் போட்டியில் ஏராளமான நாடுகள் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பல்வேறு போட்டித் தொடர்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்படுகிறது.4a58d01fee190882b225d1c372506b83-1

அதன் வரிசையில் தற்போது நியூஸிலாந்து-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட 18 ஆண்டுகளுக்கு பின்பு பாகிஸ்தான் சென்றிருந்தது நியூசிலாந்து அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இது குறித்து சில விளக்கங்களை அறிவித்துள்ளது. அதன்படி வீரர்களின் பாதுகாப்பை தங்களுக்கு முக்கியம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானிலுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Sports

To Top