ரூ.10 கோடி தங்கத்தை கடத்திய 18 பெண்கள்.. மர்ம உறுப்பில் மறைத்து வைத்திருந்ததாக தகவல்..!

ரூபாய் 10 கோடி மதிப்புள்ள தங்கத்தை மர்ம உறுப்பில் வைத்து கடத்தியதாக 18 பெண்கள் உட்பட 19 பேர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தங்கத்தை கடத்தி வருவதும் அதிகரித்து வருகிறது. விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்தாலும் தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை தங்கத்தை கடத்தினால் கோடி கணக்கில் சம்பாதித்து விடலாம் என்பதால் தங்க கடத்தலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தங்க கடத்தலில் ஈடுபடும் பலர் சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு தண்டனை அனுபவித்த போதிலும் தங்க கடத்தல் குறையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தங்கத்தை சில பெண்கள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான 18 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நபரை சோதனை செய்ததில் ரூபாய் 10 கோடி மதிப்புள்ள தங்கம் அவர்கள் உடலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கத்தை கடத்திய 18 பெண்களும் சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் மட்டும் இந்தியர் என்போம் விசாரணையில் தெரியவந்தது. பேஸ்ட் வடிவில் தங்கத்தை மாற்றி அதனை மர்ம உறுப்புகளில் வைத்து தங்கத்தை பெண்கள் கடத்தியதாகவும் இதன் மதிப்பு ரூபாய் 10.16 கோடி என்றும் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலிருந்து மும்பைக்கு பயணம் செய்த இந்த பெண்கள் பிடிபட்டதை அடுத்து இந்த பெண்களின் கூட்டாளிகளும் தங்கத்தை கடத்தும் வேலையில் ஈடுபட்டு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

இந்த குழுவினர் மூன்று விமானங்களில் பயணம் செய்வதாகவும் எனவே சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டுபிடித்து அவர்களை இடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் முழுமையாக மர்ம உறுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் பெண் சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனை செய்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி 18 பெண்களிடம் ரூபாய் 88 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.