அய்யப்பன் கோவில் 18 படிகளின் தத்துவம்

அய்யப்பன் கோவிலுக்கு நேற்று முதல் பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து வருகின்றனர். விரதமிருந்த பக்தர்கள் இருமுடி கட்டி பதினெட்டு படி வழியாக ஏறி அய்யப்பனை காண செல்வார்கள். சாதாரணமாக செல்லும் பக்தர்கள் 18 படி ஏற முடியாது அப்படி புண்ணியம் வாய்ந்த படிகளாக இந்த 18 படிகள் காணப்படுகின்றன. இந்த புனிதம் வாய்ந்த 18 படிகள் குறித்த விளக்கத்தை பார்க்கலாம்.

முதலில் வரும் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று கூறப்படுகின்ற மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகியவை பற்றியது


அடுத்து வரும்  எட்டு படிகள்  ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம் ,குரோதம், லோபம், மோகம், மதம் ,மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகியவற்றை குறிப்பிடுகின்றது.


அடுத்த மூன்று படிகள் குறிப்பிடுவது என்னவென்றால்  பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை முக்குணங்கள் என்று சொல்லப்படுகின்ற சத்துவ குணம், ரஜோ குணம் ,தமோ குணம் ஆகிய குணங்களை குறிப்பிடுகின்றன.


பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி (ஞானம்) ,அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.

தத்துவம்
18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைத்து அய்யப்பனை வழிபட்டால் பிறப்பு இறப்புக்கு காரணமான நம்மை முக்தி அடையாமல் செய்து வாழ்க்கையோடு ஒட்டி நம்முடனே இருந்து கர்மவினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகும் என்று நம்பப்படுகிறது

படிகளின் சுருக்கமான விளக்கம்.

1ம் படி-காமம் 11 ம் படி—-இல்லறப்பற்று
2ம் படி—-குரோதம் 12 ம் படி—-புத்திரபாசம்
3 ம் படி—லோபம் 13 ம் படி—-பணத்தாசை
4 ம் படி—மோகம் 14 ம் படி—பிறவி வினை
5 ம் படி—மதம் 15 ம் படி—-செயல்வினை
6 ம் படி—மாச்சர்யம் 16 ம் படி—-பழக்கவினை
7 ம் படி—வீண்பெருமை 17 ம் படி—-மனம்
8 ம் படி—அலங்காரம் 18 ம் படி—–புத்தி
9 ம் படி—பிறரை இழிவுபடுத்துதல்
10 ம் படி—பொறாமை

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews