18 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்!

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த ஒன்றரை வயது ஆண்குழந்தை சில தினங்களின் முன் வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த கேபிள் ஒயர் மீது விளையாடிக் கொண்டிருந்தது, அப்போது குழந்தை தீடிரென கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே பெற்றோர்கள் குழந்தையை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் தலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் குழந்தை மூளை சாவு அடைந்துள்ளது. இந்த நிலையில் குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருப்பதால் குழந்தையின் பெற்றோர்கள் அதிரடி முடிவெடுத்துள்ளனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன் வந்துள்ளனர். இதயம் , சிறுநீரகம் , கல்லிரல் தானம் பெறப்பட்டு அந்த உறுப்புகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு பொறுத்தப்பட்டது.

ரூ.40,000 சம்பளம்: தேர்வு கிடையாது!

இந்த குழந்தை தான் மாநிலத்திலே முதல் உடல் உறுப்பு தானம் செய்த சின்ன குழந்தை என்பது குறிப்பிடதக்கது. தமிழ் நாட்டில் 2010 முதல் 2023 வரை 52 குழந்தைகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.