Connect with us

மீண்டும் மீண்டும் சிக்கும் முன்னாள் அமைச்சர்; தற்போது 18 லட்ச ரூபாய் பறிமுதல்!!

லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழகம்

மீண்டும் மீண்டும் சிக்கும் முன்னாள் அமைச்சர்; தற்போது 18 லட்ச ரூபாய் பறிமுதல்!!

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு விதமான திட்டங்களை அமல்படுத்தி மக்களிடையே பெருத்த வரவேற்பு பெற்று காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களின் சொந்தமான இடங்கள் வீடுகளில் வருமான வரி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடந்தது. அதிலும் குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மிகவும் தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் விஜய் பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 18 இலட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூபாய் 18.37 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர். மேலும் வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள் நான்கு வங்கிப் பெட்டக சாவிகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய மருத்துவ குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு விஜயபாஸ்கர் சான்று தந்ததாக புகார் எழுந்துள்ளது. விஜயபாஸ்கர் மீதான வழக்கில் சென்னை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top