உஷாரா இருங்க!! இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அப்டேட்!!

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய புயல் காரணமாக,ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி ,தேனி ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,திண்டுக்கல் ,விருதுநகர் ,மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“வாட்ஸ்-அப்” சேவை முற்றிலுமாக முடக்கம்!! பயனாளர்கள் தவிப்பு!!

அதே போல் தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,புதுக்கோட்டை , நீலகிரி ,கோவை,திருப்பூர் ,மாவட்டங்கள் ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

இதனை அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் விற்பனை! பத்திரிகையாளர் மீது நடவடிக்கை? – அண்ணாமலை காட்டம்!!

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment