தமிழ் நாட்டில் 90 அணைகளில் 18 அணைகள் முழு கொள்ளளவை எட்டி100% நிரம்பின!

அக்டோபர் மாதம் இறுதியில் நம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதலே  தமிழகத்தில் அதிக கனமழை பெய்து கொண்டே வருகின்றன.

குதிரையாறு அணை

குறிப்பாக அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள் நிரம்பி வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 90 அணைகள் உள்ளன.

90 அணைகளில் 18 அணைகள் தற்போது நிரம்பி உள்ளதாக காணப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 90 அணைகளில் 18 அணைகள் தனது 100% கொள்ளளவை நிரம்பின.

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்டாறு அணை,திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேர்வாய் கண்டிகை அணை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் ஓடை அணை, வேலூர் மாவட்டத்தில் உள்ள மோர்தானா அணை தனது 100% கொள்ளளவை நிரம்பின.

தென்காசி மாவட்டத்திலுள்ள குண்டாறு அணை, அடவிநயினார் கோவலனை, நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு அணை, குமரி மாவட்டத்தில் உள்ள மாம்பழத்துறையாறு மற்றும் பொய்கை அணை, மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தையாறு அணை தனது 100% கொள்ளளவை நிரம்பின.

தேனி மாவட்டத்திலுள்ள சண்முகாநதி, சோத்துப்பாறை அணை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில் அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோலையார் அணை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வரதமாநதி அணை, ஈரோடு மாவட்டத்திலுள்ள குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment