#BREAKING பெற்றோர்களே உஷார்; இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி!

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ள அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிரப்களின் ஆய்வக சோதனைகளில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது மெடிக்கல் ஷாப் ஊழியர்களின் பரிந்துரையின் பேரில் வழக்கமான அளவை விட அதிகமான டோஸ்களுக்கு குழந்தைகளுக்கு இந்த சிரப் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

குழந்தைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, 2 முதல் 7 நாட்கள் வரை வீட்டில் இந்த சிரப்பை 2.5 முதல் 5 மில்லி அளவுக்கு தினந்தோறும் மூன்று முதல் நான்கு முறை எடுத்துக்கொண்டதும், இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகவும் அதிகம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

18 குழந்தைகளின் மரணத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களிலிருந்தும் Doc-1 Max மாத்திரைகள் மற்றும் சிரப்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, மேலும் சரியான நேரத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறியதால் ஏழு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.