அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் அரசு அலுவலகங்களில் சோதனை! 18.20 லட்சம் ரூபாய் பறிமுதல்!

லஞ்ச ஒழிப்புத்துறை

தமிழகத்திற்கு சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை அதிகமாக காணப்படுகிறது. முதலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் காணப்பட்டது.அவர்களிடமிருந்து கணக்கில் வராத இலட்சக்கணக்கான பணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.லஞ்சம்

அதன் பின்னர் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் நடைபெற்றது.இவை நீலகிரி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெறுகிறது. அந்த சோதனையில் 18.20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் 33 அரசு அலுவலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 18.20 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கணக்கில் வராத இந்த ரூபாய் 18.20 லட்சம் ரொக்கம் மற்றும் ரூபாய் 6 லட்சத்து 47 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், 36 பெட்டி பட்டாசுகள் போன்றவைகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மின்சார வாரியம், போக்குவரத்துத்துறை, டாஸ்மார்க் உள்ளிட்ட அலுவலங்களிலும் சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print