கோலாகலமாக தொடங்கியது 17-வது ரோஜா கண்காட்சி : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி !!

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா வாழ்விடமாக நீலகிரி அமைகிறது. இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். குறிப்பாக சுற்றுலா  பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலகிரியில் ரோஜா கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஜா கண்காட்சி நடைபெறாத நிலையில் இந்தாண்டு மீண்டும் கோடைவிழா தொடங்கப்பட்டு தற்போது களைகட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கூடலூரில் நேற்று வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்பட்டது. இதனிடையே இன்றைய தினத்தில் உதகையில் 17-வது ரோஜா கண்காட்சி தொடங்கியுள்ளது.

இதில் காணவரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 31 ஆயிரம் வண்ண ரோஜாக்கள் கொண்டு 15 அடி உயரத்தில் மரவீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டுன் போன்ற வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 17-வது ரோஜா கண்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment