Connect with us

தமிழகத்திற்கு வந்தது 17.40 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்: இனி பற்றாக்குறை இருக்காது என தகவல்!

Tamil Nadu

தமிழகத்திற்கு வந்தது 17.40 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்: இனி பற்றாக்குறை இருக்காது என தகவல்!

da6465c5b68d899e6426b25ff5b99df5

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் கடந்த சில வாரங்களாக மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசிகள் வரவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதனை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் அவ்வப்போது லட்சக்கணக்கில் தடுப்பூசிகளை அனுப்பி வந்த மத்திய அரசு தற்போது ஒரே நாளில் 17.40 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவாக முதல் முறையாக 17.40 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து மாநில தொகுப்புக்கு குளிரூட்டும் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது மிகப்பெரிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் இனி ஒரு சில வாரங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று கருதப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top