17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது!!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை பகுதியில் வசித்து வருபவர் காத்தமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் காத்தமுத்து 17-வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், காத்தமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.