Connect with us

செல்போன் கேம்!! 17-வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை!!!

Poison

தமிழகம்

செல்போன் கேம்!! 17-வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை!!!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாண்டதை தாய் கண்டித்ததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி பகுதியில் காளிமுத்து-வாசுகி என்ற தம்பதியினர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு பெண், இரண்டு ஆண் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காளிமுத்து இறந்து 10 வருடங்கள் ஆனதாக கூறப்படுகிறது.

தற்போது கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் 17-வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி அதிகநேரம் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் தாய் வாசுகி இதனை கண்டித்து தன் மகளை கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய தாக தெரிகிறது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். செல்போன் மோகத்தால் தாய் திட்டியதற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top