என்னப்பா சொல்றீங்க 30 நாள்ல 17 நாள் பேங்க் லீவா!! வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி!!

பொதுவாக இந்தியாவிலேயே அதிக விடுமுறை பெறும் வேலை எதுவென்றால் அதனை வங்கி வேலை என்று கூறுவர். பல இளைஞர்கள் மத்தியிலும் வங்கி வேலைக்கு செல்வது ஒரு ஆசையாகவே காணப்பட்டுள்ளது.வங்கி விடுமுறை நாட்கள்

இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் தற்போது வெளியாகி உள்ளது அதன்படி நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கி விடுமுறை உள்ளதாக காணப்படுகிறது. நவம்பர் 1ஆம் தேதி கன்னட ராஜ்யோஸ்தவா என்ற பண்டிகையை வருகிறது.

நவம்பர் 3ஆம் தேதி நரக சதுர்த்தி என்ற பண்டிகையும், நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப் படுகிறது.

நவம்பர் 5ஆம் தேதி தீபாவளி பண்டிகைகான விடுமுறை நாட்கள் ஆகவே கருதப்படுகிறது. அது நவம்பர் ஆறாம் தேதி தீபாவளி விடுமுறை நாட்களாக உள்ளது.

நவம்பர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் சத் பூஜை கொண்டாடப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி வாங்கலா திருவிழா கொண்டாடப்படுகிறது.  நவம்பர் 19ஆம் தேதி குரு நானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 22 ஆம் தேதி கனகதாச ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 23ஆம் தேதி
செங் குட்ஸ்னெம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் மேற்கண்ட நாட்கள் காண விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

இவ்வாறு இருப்பினும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக காணப்படுகிறது. இதனால் அடுத்த மாதத்தில் 17 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment