தீபாவளிக்கு ஊருக்கு போக 16,540 சிறப்பு பேருந்துகள்! திரும்பி வர 17,719 சிறப்பு பேருந்துகள்!!

பேருந்து

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து 6 இடங்கள் மூலம் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட உள்ளன.சிறப்பு பேருந்து

இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தீபாவளி திருநாளாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல இந்த 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்படும் என்று பொதுப் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வர 17719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரையில் சென்னையிலிருந்து மட்டும் 9809 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுவரை 72 ஆயிரத்து 597 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தீபாவளிக்கு பின் சொந்த ஊர்களிலிருந்து பணியிடங்களுக்கு திரும்பி வர  நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print