சென்னை: விதிகளை மீறி பட்டாசு வெடித்தாக 163 வழக்குகள் பதிவு!!

நாடு முழுவதும் நேற்றைய தினத்தில் தீபாவளி பண்டிக்கை கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிக்க தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் நேரக்கட்டுப்பாடு விதித்து இருந்தது. அதன் படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரம் வெடிக்க அனுமதி வழங்கி இருந்தது.

அதே போல் இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேர கட்டுப்பாடு விதித்திருந்தது.

இதற்கிடையில் விதிகளை மீறி சென்னையில் பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment