ஏப்ரல் கடைசி வாரத்தில் பொதுத்தேர்வு! பள்ளிகளில் 1600 கட்டிடங்கள் சேதம்!!: அமைச்சர் அன்பில் மகேஷ்;

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடைபெறும். இந்த பொதுத் தேர்வானது மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாத இறுதி வாரத்திற்குள் நடைபெற்று முடிந்து விடும். ஆனால் 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் தொடங்க உள்ளதாக தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அன்பில் மகேஷ்

அதன்படி ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். ஜனவரி மூன்றாவது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்தார்.

பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முதல் கட்டமாக 1600 கட்டிடங்கள் சேதம் அடைந்து உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 1600 கட்டிடங்களில் இடிக்க வேண்டியதை உடனடியாக இடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment