வெறும் 160 இடத்துக்கு 1,38,440 பேர் அப்ளே! பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு!: உறுதி அமைச்சர் பொன்முடி;

இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு இணையான, அதனை போன்ற மற்றொரு படிப்பு என்றால் அதனை பாலிடெக்னிக் படிப்பு என்றே கூறலாம். இந்த நிலையில் தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடக்கும் நாள் தள்ளி வைக்கப்பட்டது.பொன்முடி

இதுகுறித்து தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சில அறிவிப்புகளை கூறியுள்ளார்.அதன்படி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

டிசம்பர் 8ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை தொகுதி தொகுதியாக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று அவர் கூறினார். டிசம்பர் 8ஆம் தேதி 23 ஆயிரத்து 684 பேருக்கு விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்றும் கூறினார்.

டிசம்பர் 9ஆம் தேதியில் 21299 பேர் விரிவுரையாளர் தேர்வை எழுத உள்ளனர் என்றும் கூறினார். டிசம்பர் 10ஆம் தேதி 24 ஆயிரத்து 719 பேர் விரிவுரையாளர் தேர்வு எழுத உள்ளனர் என்றும், டிசம்பர் 11ஆம் தேதி  32190 பேர்  விரிவுரையாளர் தேர்வு எழுத உள்ளனர் என்றும், டிசம்பர் 12ஆம் தேதி 36 ஆயிரத்து 248 பேர் விரிவுரையாளர் தேர்வு எழுத உள்ளனர் என்றும் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தொழில்நுட்ப கல்விக்கான விரைவில் தேர்வு 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்படும் என்றும் கூறினார். 160 அமைச்சர் பொன்முடி பணிக்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அமைச்சர் பொன்முடி தகவல் அளித்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print