Connect with us

16 மணி நேரம் மின்வெட்டு! மூடப்பட்ட மின் நிலையங்களை திறக்க உத்தரவு!!

மின்சாரம்

செய்திகள்

16 மணி நேரம் மின்வெட்டு! மூடப்பட்ட மின் நிலையங்களை திறக்க உத்தரவு!!

தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் மின் பிரச்சனையானது அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 12 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நம் தமிழகத்திலும் சில நாட்களுக்கு முன்பு மின்வெட்டு ஆங்காங்கே நிகழ்ந்தது. அவை தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் 16 மணி நேரம் பல இடங்களில் மின்வெட்டு பிரச்சனை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் மின் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மூடப்பட்ட மின் நிலையங்களை மீண்டும் திறக்க அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் மின் பற்றாக்குறை 7787 மெகாவாட் எட்டியுள்ளதால் பல நகரங்களில் 16 மணி நேரம் வரை மின்வெட்டு பிரச்சனை உள்ளது.

மின் தட்டுப்பாட்டை போக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டார். கடந்த ஓராண்டில் மூடப்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறால் செயல்படாமல் இருந்த 18 மின் நிலையங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top