டிசம்பர் மாதம் மட்டும் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை! 4 நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை!!

ஒவ்வொரு மாதமும் அதிக விடுமுறை நாட்களை பெற்ற வேலை எதுவென்றால் அதனை வங்கி வேலை என்று கூறலாம்.இந்த மாதம் மட்டும் 15 நாட்களுக்கு மேலாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

வங்கி விடுமுறை நாட்கள்

இந்த நிலையில் அடுத்த மாதம் டிசம்பரில் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது என்றும் மாநிலங்கள் கேற்றபடி மாறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 3ஆம் தேதி புனித பிரான்சிஸ் சேவியர் விழா கொண்டாடப்படுகிறது.டிசம்பர் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 11ம் தேதி மாதத்தின் 2 ஆவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து டிசம்பர் 18ஆம் தேதி யு சோ சோ தாம் கீ பிறந்தநாள் காரணமாக  வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரணமாக வங்கிகளிலிருந்து வெளிப்பட்டுள்ளது. டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு டிசம்பர் 26ம் தேதியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் விடுமுறை அளிக்கப்பட்டது டிசம்பர் 27ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30-ஆம் தேதி யு கியாங் நோங்பா காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக வங்கிகள் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment