News
இணையத்தில் வைரலாக பரவிய தாய்க்கு “15 நாள் காவல்”!
தற்போது உள்ள காலகட்டத்தில் அன்பு பாசம் கருணை என்பது காணாமல் போய்க் கொண்டே உள்ளது என்றே கூறலாம். பல பகுதிகளில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சித்திரவதையை அனுபவித்து வருகின்றனர். மேலும் இதில் வேதனை என்னவென்றால் அந்த பாதிப்பு உருவாக்கு வது அந்த பாதிக்கப்படுபவர்களின் நெருங்கிய உறவினர்களே ஆகும்.
தற்போது இணையதளத்தில் சில மணி நேரங்களாக வைரலாக பரவியது தாய் ஒருவர் தனது குழந்தையை அடித்தது அதுவும் அவர் கண்மூடித்தனமாக தாக்கியது அனைவரையும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்த நிலையில் குழந்தையை தாக்கிய தாய்க்கு 15 நாள் காவல் விதிக்கப்பட்டது. அதன்படி செஞ்சி அருகே இரண்டு வயது குழந்தையை தாக்கிய தாய் துளசிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது.
துளசியை 15 நாள் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் உத்தரவிட்டார்.தனது 2 வயது குழந்தையை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அந்த தாய்க்கு தற்போது சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியோடு மட்டுமில்லாமல் சோகத்தினை கொடுக்கிறது.
