
Tamil Nadu
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட 1500 கோடி ரூபாய் நிதி-ஜப்பான் நிறுவனம்;
நம் தமிழகத்திலேயே முதல் முறையாக எய்ம்ஸ் மருத்துவமனையானது மதுரை மாநகரில் அமைய உள்ளது. இதனால் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று மற்றோர் இடத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு தற்போது ஜப்பான் நிறுவனம் முன் வந்துள்ளதாக தெரிகிறது. முன் வந்ததோடு மட்டுமில்லாமல் சுமார் 1,500 கோடியை ஒதுக்கி உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.
அதன்படி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ரூபாய் 1500 கோடி நிதி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம். மொத்த திட்ட மதிப்பான 1977 கோடியில் ஜைக்கா நிறுவனம் மட்டும் ரூபாய் 1500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் கட்டப்பட உள்ள நிலையில் மீதி நிதியை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் தமிழகத்தில் விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
