ஆன்லைன் எக்ஸாம் தான் வேண்டும்! மூன்றாவது நாளாக போராட்டம்; 150 மாணவர்கள் கைது!

கடந்த திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு கல்லூரியில் வைத்து நேரடி எழுத்து தேர்வாக நடைபெறும் என்று கூறியிருந்தது. அதனை அடுத்து நேற்றைய தினம் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி எழுத்துத்தேர்வு தான் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது.

எக்ஸாம்

இன்று காலை அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இனி ஆன்லைன் எக்ஸாம் கிடையாது, நேரடி எழுத்துத் தேர்வு முறை நடைபெறும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதோடு மட்டுமில்லாமல் மதுரையில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் ஆன்லைன் எக்ஸாம் வேண்டுமென்றும், எழுத்துத் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் கல்லூரி மாணவர்கள் 150 பேர் தற்போது கைதாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

போராட்டம்

அதன்படி மூன்றாவது நாளாக மதுரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை கைது செய்தது காவல்துறை. போராட்டம் நடத்திய 710 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மதுரையில் நேரடி எழுத்துத் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 710 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரா கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி சேர்ந்த மாணவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் கூடியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment